சிவா சிவாய போற்றி [Siva Sivaya Potri] [Transliteration]
சிவா சிவாய போற்றி [Siva Sivaya Potri] [Transliteration]
சிவா சிவாய போற்றியே
நமச்சிவாய போற்றியே
பிறப்பருக்கும் ஏகனே
போருத்தருள் அனேகனே
பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்து பாடினோம்
இரப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்
யாரு இவன்? யாரு இவன்?
கல்ல தூக்கி போரானே
புள்ள போல தோளு மேல
உன்ன தூக்கி போரானே?
கண்ணு இரண்டு போதல
கைய் காலு ஓடல
கங்கையதான் தேடிகிட்டு
தன்ன தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து பொகுதே
எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
கலைமகள் உன் கைதியே
அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அர்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவில்லா எம் உருத்திரன்
ஒலிர்விடும் எம் தேசனே
குளிர்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழுகும் ஈசனே
நில்லாமல் ஆடும் பந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் அந்தமே
யாரு இவன்? யாரு இவன்?
கல்ல தூக்கி போரானே
புள்ள போல தோளு மேல
உன்ன தூக்கி போரானே?
கண்ணு இரண்டு போதல
கைய் காலு ஓடல
கங்கையதான் தேடிகிட்டு
தன்ன தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து பொகுதே