ஆழ்கடலே [Under The Sea] [Aazhkadale] lyrics
ஆழ்கடலே [Under The Sea] [Aazhkadale] lyrics
ஏரியல் சொன்னா கேளு, மனிதவுலகம் ஒரு குப்பை கூடம்,
ஆனா நம்மளோட இந்த கடல் மனிதர்கள் பாக்காத ஒரு சொர்க்கலோகம்.
இக்கரைக்கு அக்கறை பச்சை,
சொன்னா நீயும் கேட்டுக்கோ
தரையில் வாழும் உன்னோட கனவு
தவறு தான்னு தெரிஞ்சிக்கோ
உன்ன சுத்தி ஆழ்கடலில் அதிசய உலகமே
சந்தோஷமாய் நீயும் வாழ,
வேற உனக்கு வேண்டாமே
ஆழ்கடலே... ஆழ்கடலே ...
சந்தோஷ காற்று, ஆனந்த ஊற்று
உண்மையிதே ...
அங்கே பகலில் வேலைசெய்வார்
வெயிலிலே கருகி வாடுவார்
ஆனந்தமாக நீந்துவோம் நாமே
ஆழ்கடலில் ...
அங்கும் இங்கும் மீன்கள் ஓடும்
சந்தோஷமாய் ஆட்டம் போடும்
அங்கே மீன்கள் வாழ்வோ சோகம்
தொட்டிக்குள் சுதந்திரம் போகும்
தொட்டிமீனின் வாழ்நாள் சிறிதே
அதுதானே உண்மையே
எஜமானின் வயிறு பசித்தால்
உணவாக மாறுமே.
இங்கே, ஆழ்கடலில் நம் உலகில்
வறுப்படவேண்டாம், பயப்படவேண்டாம், சுதந்திரசமே!
வலைகளின் தொல்லை இல்லையே
தூண்டிலும் இங்கு இல்லையே
துன்பங்கள் இல்லை, ஆனந்த எல்லை
ஆழ்கடலே...(ஆழ்கடலே)
ஆழ்கடலே...(ஆழ்கடலே)
வாழ்க்கை என்னைக்கும், நாளோ பறக்கும்
ஆழ்கடலே...(ஆழ்கடலே...லே லே லே...)
ஸ்டுர்ஜனும் ரேய் கூடவே இனைந்து ஆட்டம் போடுமே,
வாழ்க்கையே ஜோரு, வாழ்ந்துதான் பாரு
ஆழ்கடலே!
குழல் ஓசையே, யாழ் ஓசையே
கிட்டார் கேக்குமே, சோகம் போகுமே
ட்ரம்பட் ஓசையே. டிரம்மில் ஓசையே
ஃபுல் சாக்சோஃபோன் இசைக்கும் (ஆமா)
இசை பொங்குமே, கடல் எங்குமே
ஆட்டம் போடலாம், பாட்டு பாடலாம்
நண்பரோடு நாம் துள்ளி ஓடலாம்
குறும்புகள் செய்யலாம்...
ஆழ்கடலே...(ஆழ்கடலே)
ஆழ்கடலே...(ஆழ்கடலே)
சுதந்திர காற்று, சந்தோஷ ஊற்று
உற்சாகமே!
அங்கிருப்பது மரவேரு, இங்கிருக்கு இன்னிசையின் வீடு
சிப்பிகள் இங்கு தாளங்கள் போடும்
ஆழ்கடலே!
ஒற்றுமையாக நம்மினம் வாழும்
ஆழ்கடலே!
ஆனந்தம் தோன்றும், வேறென்ன வேண்டும்?
தொல்லைகள் இல்லை, துன்பங்கள் இல்லை
நன்றாக யோசி மனதார நேசி
ஆழ்கடலே !!!
- Artist:The Little Mermaid (OST)
- Album:த லிட்டில் மெர்மெய்ட்