செல்வேனோ [How far I'll go] [Celvēṉō] [English translation]
செல்வேனோ [How far I'll go] [Celvēṉō] [English translation]
கரையில் நானும் பகல் இரவினில் நின்றேன் நானும்
பார்த்திருந்தேனே! ஏனோ? தெரியவில்லை!
தந்தை சொல்லை மீற ஆசை இல்லை
மனமோ அடங்கிடவில்லை
என்ன செய்தும் பலனில்லை
கடல் தாண்டிடவே மனம் ஏங்கியதே
எந்த பாதையுமே அங்கு கூடியதே
நிராசைகளே கண்ணில் தோன்றியதே
அங்கு செல்வேனோ?
கடல் வானத்தைத் தொடும் இடமே அழைக்குதே!
யார் அறிவாரோ? வழி சொல்வாரோ?
கடல் காற்றினில் பாய்மரம் விரிந்தே சென்றாலே
அங்கு செல்வேனே!
மனம் தாயகம் காத்திட ஏங்கிடுதே!
மாறும் காலம் தீவினில் இன்று எங்கும் யாரும்
சோகத்தில் இல்லை… மகிழ்ச்சியில் வாழ்கிறார்!
தீவில் வாழும் மனிதர்கள் யார்க்கும் கடமை என்பது உண்டு
என் கடமைகள் புரிந்ததே!
என் தாயகமே இங்கு தவிக்கிறதே!
உள் மனதுக்குள்ளே குரல் ஒலிக்கிறதே!
அது வேறொரு உலகிற்கு அழைக்கிறதே! என்ன செய்வேனோ?
ஒளி சிந்தி கடல் மின்னுதே… அழகே!
கடல் ஆழத்தை யார் அறிவாரோ?
அதைக் காண்பதற்கே என்னை அழைக்கிறதே இன்றே!
நான் காண்பேனே! அங்கு இருப்பதென்ன? செல்ல வழியுமென்ன?
கடல் வானத்தைத் தொடும் இடமே… அழைக்குதே!
யார் அறிவாரோ? வழி சொல்வாரோ?
கடல் காற்றும் என் பாய்மரம் விரிந்திடச் செய்தாலே
என்றேனுமே… செல்வேனே!
- Artist:Moana (OST)