ராஜன் தாவீதூரிலுள்ள [Once in Royal David's City] [Raajan Dhaavidhooril] [Transliteration]
ராஜன் தாவீதூரிலுள்ள [Once in Royal David's City] [Raajan Dhaavidhooril] [Transliteration]
ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்
வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்
ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்
பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும்
நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே
மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்
- Artist:Christian Hymns & Songs
- Album:Traditional Christmas Songs (Tamil) | பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாமாலைகள்