இழுக்கும் மாயோள் [Into the Unknown] [Izhukkum maayoll] [English translation]
இழுக்கும் மாயோள் [Into the Unknown] [Izhukkum maayoll] [English translation]
குரல் கேட்டேன் தவிர்த்தேன்
முள்ளென கண்டும் ஏன் மிதிப்பேன்
மீண்டும் மீண்டும் நீயே ஏன் அதை காதில் சேர்கின்றாய்
நீயும் போ போ என்றேன் இருந்தும் காதில் கேட்கின்றாய்
ஓசை இல்லை வஞ்சிக்கும் அதிர்வலை நீ
நான் உனை கேட்டால். அது நடக்காது
மெல்லிரைச்சல், நீயே
நான் விரும்பும் யாவரும் இதோ அனைக்கின்றேன்
விடாத சங்கின் ஓசையே அண்டாமல் போகின்றேன்
கண்டேன் சாகசங்கள் வேண்டாமே வேறொன்று
உன்னை தேடினால் என்னாவேனோ உன் ஜாலத்தால்
இழுக்கும் மாயோள் இழுக்கும் மாயோள்
இழுக்கும் மாயோள்
யாரடி நீ ? என் தூக்கம் சிதறடித்தாய்
எதற்காக நீ வந்தாய் தப்பை செய்ய தூண்டினாய் ?
இல்லை நீ என் போலே துளி இருப்பாயோ நீ ?
தண்ணீரின் மேல் நின்ற தீயப் பெண்ணே நீ ?
தினம் ஏறுது இவள் துன்பம் எந்தன் ஆற்றல் பெருக
நானுமே கைதாகிறேன் கையோடு
இழுக்கும் மாயோள் இழுக்கும் மாயோள்
இழுக்கும் மாயோள்
எங்கு போனாய் ? மறைவானாய் ?
குரல் தாராய் ? வழி ஆவாய்
தீவாக நான் நிற்க ஏன் போகின்றாய்
உன் பின்னால் நான் ஓட இழுக்கும் மாயோள்
- Artist:Frozen 2 (OST)