என்னோடிரும் [Abide with me] [Ennodirum] lyrics
என்னோடிரும் [Abide with me] [Ennodirum] lyrics
என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.
நீர்மேல் குமிழிபோல் என் ஆயுளும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.
நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
- Artist:Christian Hymns & Songs
- Album:Traditional Christian Hymns (Tamil) | பாரம்பரிய கிறிஸ்தவ பாமாலைகள்
See more